சென்னை:அரசு பள்ளிகளில், பல்வேறு பாடங்களில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை
ஆசிரியர் பணியிடங்களுக்கு, கணினி வழி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், கணினி வழி போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க தகுதியானவர்கள், வரும், 24ம் தேதி முதல், ஆன்லைனில், http://trb.tn.nic.in என்ற, இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பதிவு செய்ய, ஜூலை, 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்வின் வழியாக, 16 உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட, மொத்தம், 2,144 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், வரலாறு, பொருளியல், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவரவியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி உட்பட, 17 வகை, பாடங்களுக்கு காலியிட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
பாட வாரியாகவும், ஜாதி ரீதியாகவும் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.