'பள்ளி மாற்று சான்றிதழில் ஜாதி பெயர் கிடையாது'

சென்னை:'பள்ளி மாற்று சான்றிதழில், ஜாதி பெயர் குறிப்பிடப்படாது' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கும் போது, அதில் மாணவர்களின் ஜாதி, இனம், மதம் போன்றவை இடம்பெறும். இதில், ஜாதியை குறிப்பிடும் பகுதியில், பல ஆசிரியர்கள், ஜாதியை தவறாக குறிப்பிடுவதால், எதிர்காலத்தில் மாணவர்களின் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு சிக்கல் ஏற்படுகிற

இதை தவிர்க்கும் வகையில், பள்ளி மாற்று சான்றிதழில், ஜாதியை குறிப்பிட வேண்டாம் என, தமிழக அரசு, 2014ல், அரசாணை வெளியிட்டது. இதை பின்பற்றி, மாற்று சான்றிதழில், ஜாதியை குறிப்பிடும் முறை, ஐந்து ஆண்டுகளாக ஒழிக்கப்பட்டு விட்டது. மாறாக, 'வருவாய் துறை சான்றிதழை ஆய்வு செய்யவும்' என, அதில் குறிப்பிடப்படும்

இது குறித்து, ஆதிவாசி விகாஸ் பரிஷத் என்ற அமைப்பின் சார்பில், பள்ளி கல்வித்துறைக்கு மனு அனுப்பப்பட்டது. அதற்கு, 'தற்போதுள்ள நிலையே தொடரும்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்