பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி

கமுதி : கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள்
கணக்கெடுக்கும் பணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமார் தலைமையில் நடந்தது.கமுதி, அபிராமம், பெருநாழி அதனை சுற்றியுள்ள செங்கல் சூளைகள், 53 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.இலவச கட்டாய கல்வி அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து, சிறப்பாசிரியர்கள் பெற்றோருக்கு விளக்கினர். மேலும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தனர். கணக்கெடுப்புக்கான பணிகளை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் செய்திருந்தார்.