அரசு ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை:'அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 9 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக
உயர்த்தப்பட்டுஉள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜன., 1 முதல் அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்தி, பிப்ரவரியில் உத்தரவிடப்பட்டது.அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு, அகவிலைப்படியை, 9 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, ஜன., 1 முதல், முன்தேதியிட்டு கணக்கிடப்பட்டு, ரொக்கமாகவழங்கப்படும்.