ஓட்டு எண்ணிக்கை அறிய 'சுவிதா'

ஓட்டு எண்ணிக்கை, நிலவரம், சுவிதா, செயலி, கூகுள் செயலி, பதிவிறக்கம், தேர்தல் ஆணையம்திண்டுக்கல்:ஓட்டு எண்ணிக்கையன்று நிலவரத்தை 'சுவிதா' செயலியில் பொதுமக்கள் பார்க்கலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

லோக்சபா தேர்தலையொட்டி 'சுவிதா' எனும் அலைபேசி செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இதனை கூகுள் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். அதில் அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கடவு சொல் (ஓ.டி.பி) எஸ்.எம்.எஸ்., வரும். அதை கொடுத்து தங்கள் பெயர், மாநிலம், தொகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் தேர்தல் தொடர்பான விவரங்களை அறியலாம். சொந்த தொகுதி, மாநிலம் மட்டுமின்றி பிற மாநில வேட்பாளர்கள் பெறும் ஓட்டு விவரங்களையும் பார்க்க முடியும். ஒவ்வொரு சுற்றின் முடிவில் ஓட்டு விவரங் களை அறிய 'புக் மார்க்' (Book marks) பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.பிறகு தாங்கள் தேர்வு செய்த மாநிலம், தொகுதியில் வேட்பாளர்கள் பெறும் ஓட்டுகள் விவரம் எஸ்.எம்.எஸ்.,சில் வரும். ஓட்டு எண்ணிக்கையன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு சுற்றின் ஓட்டுக்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் ஆணைய பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அவை மூலம் 'சுவிதா' செயலிக்கு உடனுக்குடன் தகவல் பரிமாறப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.