மருத்துவம் சார் படிப்புகள் :பல்கலை கவுன்சிலிங் ரத்து

மருத்துவப் பல்கலையில் உள்ள, மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையையும், இந்தாண்டு முதல், மருத்துவக் கல்வி இயக்குனரகமே நடத்த உள்ளது.


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையில் உள்ள, மருத்துவம் சார்ந்த, பி.எஸ்சி., - எம்.எஸ்சி., உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை, பல்கலையே நேரடியாக நடத்தி வந்தது.கடந்த, 2018 - 19க்கான கவுன்சிலிங்கில்,பல்வேறு குளறுபடிகள் நடந்தன.

குறிப்பாக, மருத்துவப் பல்கலை கவுன்சிலிங்கும், மருத்துவக் கல்விஇயக்குனரக கவுன்சிலிங்கும் ஒரே நாளில் நடந்ததால், மாணவர்கள், அங்கும், இங்கும் அலைந்தனர். இதனால், பல மாணவர்களால், சரியான நேரத்தில், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியவில்லை.

இதை தவிர்க்கும்வகையில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து வகையான படிப்புகளுக்கும், கவுன்சிலிங்கை, மருத்துவக் கல்வி இயக்குனரகமே நடத்த உள்ளது.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பெரும்பாலான மருத்துவப் படிப்புகளுக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகமே, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.

சில படிப்புகளுக்கு மட்டும், மருத்துவப் பல்கலையில் நேரடியாக கவுன்சிலிங் நடந்தது. குழப்பங்கள் காரணமாக, இந்தாண்டு முதல், அனைத்தும் மாணவர் சேர்க்கையையும், மருத்துவக் கல்வி இயக்குனரகமே நடத்த உள்ளது.இவ்வாறு, அவர்கள்கூறினர்.
- நமது நிருபர் -