அரசுப் பள்ளிகளில் உள்ள 7000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பழனி: அரசுப் பள்ளிகளில் உள்ள 7000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பழனி: அரசுப் பள்ளிகளில் உள்ள 7 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பழனியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, புத்தக பை என 14 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவிற்கே தமிழகம் ஒரு வழிகாட்டியாக உள்ளது.
இந்த ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே 37 லட்சம் மாணவர்கள் லேப்டாப் பெற்றுள்ள நிலையில் 6 ஆண்டுகளில் 65 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படுவது அரசின் சாதனை.
இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும், 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படவுள்ளது.
தேர்தல் முடிவுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறைக்கு தனிச் சேனல் தொடங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள 7 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார்.