ஜூன் 3ம் வாரத்தில் வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் துணைவேந்தர் தகவல்

நாமக்கல், ''தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியாகும்'' என துணைவேந்தர்
குமார் கூறினார்.நாமக்கல் தனியார் வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வேளாண் பல்கலையில் 2019 - -20 கல்வியாண்டில் பி.எஸ்சி. வேளாண் பொறியியல் பாடப்பிரிவு சேர்க்கப்படுகிறது. இதில் 40 இடங்களுக்கு சுயநிதி பிரிவில் சேர்க்கை நடக்கிறது.நடப்பாண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 6 கடைசி நாள். இங்குள்ள ஏழு மையங்களில் 16 வகையான வேளாண் பாடப் பிரிவுகள் உள்ளன. அதில் 4000 மாணவர்கள் சேர்க்கப்படுவர். தரவரிசை பட்டியல் ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.வரும் ஆண்டுகளில் கூடுதல் பாடப் பிரிவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 14 இடங்களில் பல்கலையின் கீழ் புதிய வேளாண் பயிற்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.