மேலும் 3 நாட்களுக்கு தகிக்க போகுது அனல்

சென்னை : 'தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு அனல் காற்றுடன் கோடை வெயில் தகிக்கும்' என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Chennai, சென்னை, அனல், மழை, எச்சரிக்கை


கோடை வெயில் தமிழகம் முழுவதும் உக்கிரம் காட்டி வருகிறது. சில இடங்களில் கோடை மழை கொட்டுகிறது. நேற்று மாலை 5:30 மணி
நிலவரப்படி தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக திருத்தணியில் 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. வேலுார் 42; மதுரை, திருச்சி 41; கரூர் பரமத்தி, சேலம் 40; சென்னையில் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சூலகிரியில் 6 செ.மீ., மழை பதிவானது. நத்தம் 3; பெரியநாயக்கன் பாளையம், ஈரோடு, மணப்பாறை, கேத்தி 2; நாங்குநேரி, கோத்தகிரி, திருப்பத்துார், வாடிப்பட்டி 1 செ.மீ., மழை பதிவானது. சில இடங்களில் இடி, மின்னலுக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கோடை வெயில் நிலவரத்தை பொறுத்தவரை 'அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுவதும் வெப்பம் தகிக்கும். அனல் காற்று வீசும். சென்னையில் அதிகபட்சம் 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் கொளுத்தும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.