ஒரே நாளில் நடக்கும் 'எய்ம்ஸ், கியூசெட்' தேர்வுகள்: பிளஸ் 2 மாணவர்கள் தடுமாற்றம்

சென்னை, 'எய்ம்ஸ்' மற்றும் மத்திய பல்கலை நுழைவு தேர்வுகள், ஒரே நாளில் வருவதால், மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை
ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு, வரும், 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வு, காலை, மாலை என, இரண்டு ஷிப்டுகளாக நடக்கிறது. கணினி முறையில், மூன்றரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், தேர்வு துவங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன், தேர்வு மையங்களுக்கு வர அறிவுறுத் தப்பட்டுள்ளது. ஆடை மற்றும் ஆபரண கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய பல்கலை, சென்னையில் உள்ள பொருளியல் கல்லுாரி, கோவை மத்திய டெக்ஸ்டைல் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றில் உள்ள, படிப்புகளில் சேர, 'கியூசெட்' என்ற, நுழைவு தேர்வை எழுத வேண்டும்.இந்த தேர்வும், வரும், 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கிறது. அதே இரு நாட்களில், எய்ம்ஸ் தேர்வும் நடத்தப்படுகிறது.இரண்டு தேர்வுக்கும், மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால், எந்த தேர்வை எழுதுவது என தெரியாமல், தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.எனவே, இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பித்தவர்களுக்கு, ஒரு நாள், 'கியூசெட்' மற்றும் ஒரு நாள் எய்ம்ஸ் தேர்வு எழுத, அவகாசம் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.