வங்க கடலில் புயல் உருவானது

புதுடில்லி : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபானி புயலாக மாறியது. நாளை அதி தீவிர புயலாக வலுவெடுக்கும்.


இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிப்பில்; இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மதியம் ஃபானி புயலாக மாறியது இந்த புயலானது இலங்கை கடல் பகுதியில் வடமேற்காக நகரக் கூடும். ஏப்.,30 ம் தேதி மாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஃபானி புயல் நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு தென்கிழக்கே 1850 கி.மீ.,ல் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 20 கி.மீ., வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.


ஏப்.,30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பரவலமாக கனமழை பெய்யக் கூடும். ஏப்.,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் கேரளாவில் கனமழை பெய்யும். ஏப்.,30 ஆந்திர தெற்கு கடலோர பகுதிகளிலும், மே 1 ம் தேதி ஆந்திர கடலோர பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயலாக மாறியதை சென்னை வானிலை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.