சென்னை: அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரிகளுக்கான, பி.இ., இன்ஜினியரிங் கவுன்சிலிங், இன்று அறிவிக்கப்படுகிறது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, 'கவுன்சிலிங்' வழியாக நடத்தப்படுகிறது.இதுவரை, அண்ணா பல்கலையின் வழியாக, கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல், தமிழக உயர் கல்வி துறையின், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பாக, 'ஆன்லைன்' முறையில் நடத்தப்பட உள்ளது.தற்போது, பிளஸ் 2 தேர்வு முடித்தவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில், ஆன்லைன் வழியே,மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் நடத்தப்படும்.
இந்த கவுன்சிலிங்குக்கு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு, மாணவர்கள் நேரில் வருவதை தவிர்க்கும் வகையில், இருந்த இடத்தில் இருந்தே, ஆன்லைனில் சேர்க்கை பெறலாம். சேர்க்கை நடவடிக்கையில், தங்களுக்கான கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை, ஆன்லைனில் குறிப்பிட வேண்டும்.விண்ணப்ப பதிவு, கவுன்சிலிங் தேதி போன்ற விபரங்கள், இன்று காலை, 10:00 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.உயர் கல்வித் துறை அமைச்சர், கே.பி.அன்பழகன், உயர் கல்வி செயலர் மங்கத் ராம் சர்மா மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் ஆகியோர், விபரங்களை தெரிவிக்க உள்ளனர்.