'பூத் ஸ்லிப்' இல்லாமல் வாக்காளர்கள் அவதி

சென்னை,தமிழகத்தில், நேற்று தேர்தல் நடந்த, 38 லோக்சபா தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில், 'பூத் ஸ்லிப்'
வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், வீடு வீடாக சென்று, பூத் ஸ்லிப் வழங்கினார். ஆனால், சில பகுதிகளில், 'பூத் ஸ்லிப்' வழங்கப்படவில்லை. பூத் ஸ்லிப் எடுத்துச் சென்றவர்களால், எளிதாக ஓட்டு போட முடிந்தது.
அதில், பெயர், முகவரி, பாகம் எண், வரிசை எண் இருந்ததால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளரை அடையாளம் காண, எளிதாக இருந்தது. எனவே, 'பூத் ஸ்லிப்' எடுத்து வராதவர்களை, கட்சியினரிடம் வாங்கி வரும்படி கூறினர்.ஓட்டுச்சாவடிக்கு ெவளியே, அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு, பூத் ஸ்லிப் வழங்கினர். பூத் ஸ்லிப் இல்லாதவர்கள், அதை வாங்கி சென்று, ஓட்டளித்தனர். ஓட்டளிக்க, பூத் ஸ்லிப் அவசியமில்லை என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தும், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், பூத் ஸ்லிப் கேட்டனர்.