ஃபேஸ்புக்கின் புதிய கட்டுப்பாடு அடுத்தவாரம் முதல் நடைமுறைக்குவருகிறது

உலக முழுவதிலும் பன்மைத்துவ தேசியவாத்திற்கு எதிரான கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் அதிகளவில் வலம்வர தொடங்கியுள்ளது. இதனால் பல வன்முறை சம்பவங்களும் நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அதுபோன்ற கருத்துக்களை பகிர்வதற்கு தடைசெய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
சமீப காலமாக இனம், மதம் அடிப்படையிலான பன்மைத்துவ தேசியவாத கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் அதிகம் வலம்வர தொடங்கியுள்ளன. அந்தக் கருத்துகளின் தாக்கமும் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 15-ம் தேதி நியூஸிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அந்த கொடூர சம்பவத்தை தாக்குதலில் ஈடுபட்டவர் அதனை ஃபேஸ்புக்கில் லைவாக பகிர்ந்தார். இதனை உடனே ஃபேஸ்புக் நிறுவனம் அதன் தளத்தில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் ஃபேஸ்புக் தற்போது பன்மைத்துவ தேசியவாதத்திற்கு எதிரான கருத்துக்களை தடை செய்ய புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கொள்கையை வடிவமைக்க உதவிய கிறிஸ்டேன் கிளார்க், 'ஃபேஸ்புக்கின் முந்தைய திட்டத்தில் சில பிழைகள் இருந்தன. அதனை தற்போது வடிவமைத்துள்ள திட்டத்தில் மாற்றியுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம், 'தற்போது நிறவெறி பன்மைத்துவ தேசியவாத ஆகியவற்றுக்கு தொடர்பான கருத்துக்களை தேடும் நபர்களை 'லைஃப் ஆஃப்டர் ஹேட்' என்ற தன்னார்வு அமைப்பின் பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். இனி ஃபேஸ்புக் தளத்தில் நிறவெறி தொடர்பான கருத்துக்களை பதவிட முடியாது. இந்தப் புதிய திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும்' எனத் தெரிவித்துள்ளது