பள்ளி பாடமாகும் அபிநந்தன் கதை

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில பள்ளி பாடத் திட்டத்தில், இந்திய விமானப் படை, விங்
கமாண்டர் அபிநந்தனின் வீரத்தை கவுரவிக்கும் வகையில், அவரது சாகசத்தை பாடமாக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குள் அத்துமீறி நுழைந்த, பாக்., ராணுவ விமானத்தை, நம் விமானப் படையை சேர்ந்த, விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.
பதில் தாக்குதலில், அபிநந்தனை, பாக்., ராணுவத்தினர் சிறைபிடித்தனர். மூன்று நாட்களுக்கு பின், அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.அபிநந்தனின் வீரத்தை கவுரவிக்கும் வகையில், அவரது கதையை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்க்க, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா, பாடத் திட்ட ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளார்.