நாளை ஏவப்படும் ராக்கெட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: இஸ்ரோ தலைவர் சிவன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் திங்கள்கிழமை விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,
பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். சோதனை முயற்சியாக நாளை 1,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறையில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) பள்ளியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.