மின் வாரியத்தில் 5,000 பேருக்கு வேலை

சென்னை:தமிழக மின் வாரியத்தில், 'கேங்மேன்' பணிக்கு, 5,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மின் வாரியத்தில், கள உதவியாளர் என்ற பதவி தான், கடை நிலை பணி.
அதற்கு, ஐ.டி.ஐ., தொழில் பயிற்சி கல்வி முடித்திருக்க வேண்டும்.
தற்போது, கேங்மேன் பணியில், 5,000 ஊழியர்களை நியமிக்க, வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு, கல்வி தகுதி ஐந்தாம் வகுப்பு. எழுத்து, நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ள நபர்கள், மின் கம்பம் நடுதல், 'கேபிள்' பதிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஏப்ரல், 22 கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவோர், கூடுதல் விபரங்களை, வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.