349 காலியிடத்திற்கு தேர்வு டி.என்.பி.எஸ்.சி., 'ரிசல்ட்'

சென்னை:அரசு துறைகளில், பல்வேறு பதவிகளுக்கு, காலியாக உள்ள, 349
இடங்களுக்கான தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இளநிலை பகுப்பாய்வாளர், தொல்லியல் ரசாயனர், 24; சுகாதார பணியில், மக்கள் கருத்து கேட்பாளர், 3; கால்நடை துறை புள்ளியியல் ஆய்வாளர், 13; உதவி சிறை அலுவலர், 30; தோட்டக்கலை உதவி இயக்குனர், 279 என, 349 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த தேர்வுகளின் விடை திருத்தம் முடிந்து, மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு நியமன விதிகளின் படி, முடிவுகள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.