பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த வாரம் துவக்கம்

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; 19ம் தேதி முடிகிறது.
இதுவரை, தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்று முதல், கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட, முக்கிய பாடத் தேர்வுகள் நடக்கின்றன.
இந்நிலையில், நடந்து முடிந்துள்ள, மொழி பாடத் தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணியை, அடுத்த வாரம் துவங்க, தேர்வு துறை முடிவு செய்துள்ளது.
 
அதற்கான ஏற்பாடுகளை செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முறை, மறுமதிப்பீடு, மறுகூட்டல் பிரச்னைகள் வராமல், விடைத்தாள் திருத்தும் பணியை, செம்மையாக செய்யும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ள