சி.பி.எஸ்.இ., பிளஸ் 2வில் கணிதம், அறிவியல் தேர்வு நிறைவு

சென்னை: சி.பி.எஸ்.இ.,யில், பிளஸ் 2 கணிதம், அறிவியல் மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்தன.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்ரவரி, 15ல் துவங்கியது. முதலில் விருப்ப பாடங்கள், தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் துவங்கின. முக்கிய பாடங்களுக்கு, மார்ச், 2ல் தேர்வுகள் ஆரம்பித்தன. இந்த தேர்வு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கான கணிதத் தேர்வு, நேற்று நடந்தது. இதில், வினாத்தாள் மிக எளிதாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் கிடைக்கும் என்றும், மாணவர்கள் தெரிவித்தனர். நேற்றுடன், கணிதம், அறிவியல் பாட பிரிவினருக்கு தேர்வுகள் முடிந்து விட்டன.

இன்னும், கணினி அறிவியல், பொருளியல், கலை மற்றும் வரலாறு பாடப்பிரிவினருக்கு, பல்வேறு பாட தேர்வுகள் பாக்கி உள்ளன. அனைத்து பாடங்களுக்கும், ஏப்.,3ல் தேர்வுகள் முடிகின்றன.இதற்கிடையில், தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், இன்றுடன், பிளஸ் 2 தேர்வுகள் முடிகின்றன. இன்று, உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, அக்கவுன்டன்சி படிப்புகளுக்கு, தேர்வுகள் நடக்கின்றன.