ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 15-ந்தேதி முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 5-ந்தேதி மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும். http://www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தாள்-1, பி.எட். முடித்தவர்கள் தாள்-2 என்ற தேர்வுகளை எழுதலாம். தேர்வு நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி
பெற்றால், பள்ளியில் எடுத்த மதிப்பெண், தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண்
அடிப்படையில் காலிப்பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால்
இனிமேல், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாலும், ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் அடுத்து நடத்தப்படும் போட்டி தேர்விலும் தேர்ச்சி பெற்றால்
மட்டுமே அரசு பள்ளிகளில் பணியில் சேரமுடியும். ஆனால் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை கொண்டு
பணியில் சேரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.