ஏப்ரல் 12க்குள் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு

லோக்சபா தேர்தல் காரணமாக, ஆண்டு இறுதித் தேர்வுகளை, ஏப்ரல், 1ல் துவக்கி, 12ம் தேதிக்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு, இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.




லோக்சபா தேர்தல், தமிழகம், புதுச்சேரியில், ஏப்ரல், 18ல் நடக்கிறது. தேர்தலுக்கு, நான்கு நாட்களுக்கு முன், ஓட்டுச் சாவடிகள் அமைய உள்ள அனைத்து கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளை, தேர்தல் பணிகளுக்கு ஒப்படைக்க வேண்டும்.எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,கல்லுாரிகளின் தேர்வுகளை விரைந்து முடிக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து,தமிழக பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வரமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு தேர்வுத் துறை நடத்தும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், 29ம் தேதிமுடிகின்றன.


இதை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, ஆண்டு இறுதித் தேர்வான, மூன்றாம் பருவத் தேர்வுகளை துவங்க வேண்டும்.தேர்வுகளை, ஏப்., 1ல் துவங்கி, 12க்குள் முடிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை, முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.


வேலை நாட்கள் குறைவாக இருந்தால், சனிக்கிழமையையும் வேலை நாட்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏப்., 12, பள்ளிகளுக்கு கடைசி வேலை நாளாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.