தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென் தமிழகத்தில்
நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி தொடரும். ஊட்டியில் குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை பதிவானது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.