பழைய ஓய்வூதியத் திட்டம் , ஊதிய முரண்பாடு பரிசீலனையில் உள்ளது - பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் தகவல்

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ்
சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்டவை பின்வருமாறு :


* அனைத்து துறை, அரசு ஊழியர் ஊதியத்திற்காக ரூ.2,63,823.49 கோடி ஒதுக்கீடு

* ஊதியம், ஓய்வூதியம், பிற ஓய்வூதியக்கால பலன்களுக்காக ரூ.55,399.75 கோடியும், ரூ.29,27.11 கோடியும் ஒதுக்கீடு

* அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை பரிசீலனை

* அரசு ஊழியர்களுகளின் ஊதிய முரண்பாடுகளை களைய சித்திக் குழு தந்த அறிக்கையும் பரிசீலனையில் உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.