'பொது
தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை
பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை
விதித்துள்ளது.பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள், அடுத்த
மாதம் நடக்கின்றன. பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது.
இந்நிலையில், அரசு தேர்வு துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேர்வுத்துறை இணை இயக்குனர், சேதுராம வர்மா விதித்துள்ள அந்தக் கட்டுப்பாடுகள், மாணவர்கள் ஹால் டிக்கெட்களின் பின்பக்கம் அச்சிடப்பட்டு உள்ளது.அதன் விபரம்:
தேர்வுத்துறை இணை இயக்குனர், சேதுராம வர்மா விதித்துள்ள அந்தக் கட்டுப்பாடுகள், மாணவர்கள் ஹால் டிக்கெட்களின் பின்பக்கம் அச்சிடப்பட்டு உள்ளது.அதன் விபரம்:
- பொது தேர்வில், ஹால் டிக்கெட் இல்லாமல் வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது
- மொபைல் போன், தொலை தொடர்பு மின்னணு சாதனங்களை, தேர்வு மையங்களுக்குள் எடுத்து வர அனுமதியில்லை
- மாற்று திறனாளி மாணவர்களுக்கு, அரசின் விதிப்படி, உரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன
- தேர்வர்கள், தங்கள் விடைத்தாளில், ஸ்கெட்ச் பேனா மற்றும் கிரயான்ஸ் போன்ற, வண்ண பென்சில்கள் பயன்படுத்த அனுமதி இல்லை
- தேர்வர்கள், 'பிட்' வைத்திருத்தல், பிற தேர்வர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாளை பரிமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை தேர்வு விதிகளை மீறும் செயல்
- தேர்வர்கள், தாங்கள் எழுதிய விடைகளை, தாங்களே அடித்தல் போன்ற நிகழ்வுகள், ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு, அதற்கான தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.