திண்டுக்கல்: ''எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்
நம்பிக்கையை ஏற்படுத்தும் கட்சிக்கு, தேர்தலில் ஆதரவு அளிப்போம்,'' என, அரசுப் பணியாளர் சங்க சிறப்பு தலைவர், பாலசுப்பிரமணியன் கூறினார்.
திண்டுக்கல்லில், அவர் கூறியதாவது:அரசு பணியாளர்களின் கோரிக்கையை தீர்க்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசு பணியாளர்களின் கோரிக்கை அடங்கிய கடிதத்தை, அனைத்து அரசியல் கட்சியினரிடமும் வழங்க உள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும்.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், ஆசிரியர்களிடம் இருந்த ஒற்றுமை, அரசு ஊழியர்களிடம் இல்லை. அதனால், போராட்டம் வெற்றி அடையவில்லை.தேர்தலின் போது, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அரசியல் கட்சியினர் வாக்குறுதி மட்டுமே அளிக்கின்றனர். தேர்தலுக்கு பின், அதை நிறைவேற்றுவதில்லை.எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் கட்சிக்கு, தேர்தலில் ஆதரவு அளிப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.