கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டம்

கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை... இலவசம்: ஏழை மாணவர்களுக்கு உதவ அரசு அதிரடி
பள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில், கல்வி உரிமை சட்டம், ௨௦௧௦ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி, 9 முதல், 14 வயதுக்குட்பட்டோருக்கு, 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், ஏழை மாணவ - மாணவியருக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குழந்தை தொழிலாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொருளாதார வசதி இல்லாததால் கல்வி கற்க முடியாமல் போவதை தடுக்கவும், கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இந்த சட்டம், எதிர்பார்த்த பலனை தரவில்லை.குறையவில்லை.
பள்ளிகளில், 8ம் வகுப்புக்கு பின், படிப்பை கைவிடும், மாணவ - மாணவியர் எண்ணிக்கை குறையவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும், 2014 - 15ல், 8.66 லட்சம் மாணவ - மாணவியர், பள்ளி படிப்பை பாதியில் அரசுக்கு கோரிக்கைகைவிட்டது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த நிலை பல மாநிலங்களில் தொடர்கிறது. எனவே, 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ், பிளஸ் 2 வரை, இலவச கல்வியை கட்டாயமாக்க வேண்டும்' என, பல மாநில அரசுகள், மத்திய விடுத்துள்ளன.
இது பற்றி, டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், அகில இந்திய பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான, அசோக் அகர்வால் கூறியதாவது:கல்வி உரிமை சட்டப்படி, அரசு உதவி பெறாத, தனியார் பள்ளிகள், ஏழை மாணவ - மாணவியருக்காக, ௨௫ சதவீத இடம் ஒதுக்க வேண்டும்; அவர்களிடம், கட்டணம் வசூலிக்க கூடாது. இலவச கல்வி இல்லாததால், 8ம் வகுப்புக்கு பின், தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ - மாணவியர், அரசு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை உள்ளது.அப்போது, பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பலர், 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.எனவே, 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும்' என, ௨௦௧௭ல் இருந்தே, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் கோரி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
பரிசீலனை :
அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல்வேறு மாநிலங்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள், சமூக நல அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று, பிளஸ் 2 வரை, கட்டாய இலவச கல்வியை நீட்டிக்க
பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.பள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியில் நிறுத்துவதை தடுக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்காலம் இல்லை :
'ஏழை மாணவ - மாணவியருக்கு, 8ம் வகுப்பு வரை மட்டும் இலவச கல்வி அளிப்பதால் பயன் இல்லை' என, பிரபல கல்வியாளரும், டில்லி, 'ஜாமியா மிலியா இஸ்லாமியா' பல்கலை பேராசிரியருமான, ஜானகி ராஜன் கூறினார்.இது பற்றி அவர் கூறியதாவது:ஏழை மாணவ - மாணவியருக்கு, 8ம் வகுப்புக்கு பின், கட்டணம் செலுத்தி படிப்பது, மிகவும் கஷ்டம். இதனால் பலர், 8ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தி விடுகின்றனர். 8ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு, வேலை கிடைப்பது சிரமம். சாதாரண வேலைக்கு கூட, ௧௦ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.எனவே, கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும். பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு, மேற்படிப்பு பற்றி சிறந்த புரிதல் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.