சென்னை டிபிஐ அலுவலகத்தில் ரெய்டு

சென்னை : சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி கழக இயக்குனர் அலுவலகம், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் ஆராய்ச்சி கழக இயக்குனர் அறிவொளியின் வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது.

சிறுவர்களுக்கான இதழ் தயாரிப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 4 கோடி ரூபாயில் முறைகேடு நடந்துள்ளது என்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடந்தது.