வேலைக்கு வராவிட்டால் : தலைமை செயலர் எச்சரிக்கை

சென்னை: 'தலைமை செயலக ஊழியர்கள், இன்று வேலைக்கு வராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா
வைத்தியநாதன், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலைக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: தலைமை செயலர் எச்சரிக்கை
அனைத்து துறை செயலர்களுக்கும், கிரிஜா அனுப்பியுள்ள கடிதம்:இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சம்பளம் வழங்க கூடாது. பகுதி நேர

ஊழியர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பணி நீக்கம் செய்ய வேண்டும்.இன்று,அரசு ஊழியர்கள் யாருக்கும், தற்செயல் விடுப்பு வழங்கக் கூடாது.அனைத்து துறை தலைவர்களும், தங்களுடைய துறையில் உள்ள மொத்த ஊழியர்கள்; வேலைக்கு வந்தவர்கள்; வராதவர்கள்; ஏற்கனவே விடுப்பு கேட்டிருந்தவர்கள் விபரத்தை, இன்று காலை, 10:30 மணிக்குள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு,கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
போராட்டம் தொடரும்

இதற்கிடையே நேற்றுஇரவு ஜாக்டோ -
ஜியோ அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , வாழ்வாதார பிரச்சனையாக உளள புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கோரிக்கைளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்போராட்டம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது