. 'ஜாக்டோ - ஜியோ' போராட்டம்

போராட்டம்,தூண்டிய,சங்க நிர்வாகிகள்,வலை
சென்னை: வேலை நிறுத்தத்தை கைவிட்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால்,சென்னை: வேலை நிறுத்தத்தை கைவிட்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால், 'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டத்தை துாண்டி விட்ட சங்க நிர்வாகிகளுக்கு, வலை விரிக்கப்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற பின்னரும், சங்க பதவியை விடாமல், உசுப்பேற்றி விட்டவர்கள் பட்டியலும் தயாராகிறது. எதிர்காலத்தில், இதுபோன்ற பிரச்னைகள் எழாமல் தடுக்க, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், ஜன., 22 முதல், தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் முதல் நாளிலேயே, அரசு ஊழியர்களில், ஒரு தரப்பினர் மட்டுமே களத்தில் இருந்தனர்.அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், போராட்டம் வேண்டாம் என, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் துறை கமிஷனர் சத்ய கோபால் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர். அதனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், வேலைக்கு
திரும்பினர்.
ஆனால், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மட்டும், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை தீவிரப்படுத்தினர். பெரும்பாலான இடங்களில், பள்ளிகளுக்கு பூட்டு போட்டு, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் வராததால், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
மாணவர்களும், பொது மக்களும் ஆசிரியர்களின் போராட்டத்தால், கடும் கோபம் அடைந்தனர். பல இடங்களில், ஆசிரியர்கள் பணிக்கு வர வலியுறுத்தி, மாணவர்களும், பெற்றோரும் மறியல் செய்தனர்.
சமூக வலைதளங்களிலும், ஆசிரியர்களின் போராட்டத்தை, கடுமையாக விமர்சனம்
எழுந்தது.சாலைகளில் இறங்கி, மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆசிரியர்களில், 1,061 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.மேலும், பணிக்கு வராத ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பணியிடங்கள் காலியாகும் என்றும், அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் பாயும் என்றும், பள்ளி கல்வித்துறை எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையால், நேற்று முன்தினம், 70 சதவீத ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு வந்தனர். நேற்று, 95 சதவீதம் பேர், பணிக்கு திரும்பி
விட்டதாக, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்தார்.இவர்கள் அனைவருமே, போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்ப வில்லை என்றும், இவர்களை, சில சங்க நிர்வாகிகளே துாண்டி விட்டனர் என்றும், இவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது; சில ஆசிரியர்கள், வெளிப் படையாக பேட்டியும் கொடுத்தனர்.
இவர்களில், சங்க நிர்வாகிகள் மட்டும், இன்னும் வேலையை புறக்கணித்து வருகின்றனர். பணியில் இருந்து ஓய்வுபெற்று, சங்க நிர்வாகிகளாக உள்ளவர்கள், அவர்களை தடுப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன.எனவே, அரசு இயந்திரத்தை முடக்கும் நோக்கில், போராட்டத்தை துாண்டி விடும், சங்க நிர்வாகிகளின் விபரங்களை திரட்ட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், ஓய்வு பெற்ற பின்னும், சங்க பதவியை விடாமல் இருப்பவர்களின் பட்டியலும் தயாரிக்கப்படுகிறது.தாங்கள் பணியாற்றிய துறையை முன்னேற்ற உதவாமல், குழப்பம் செய்வோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாமா என, அரசு தரப்பில், ஆலோசனை நடந்து வருகிறது. எதிர்காலத்தில், பிரச்னைகள் எழாமல் தடுக்க, இந்த நடவடிக்கை உதவும் என, அரசு தரப்பு நம்புகிறது.முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டத்தை துாண்டி விட்ட சங்க நிர்வாகிகளுக்கு, வலை விரிக்கப்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற பின்னரும், சங்க பதவியை விடாமல், உசுப்பேற்றி விட்டவர்கள் பட்டியலும் தயாராகிறது. எதிர்காலத்தில், இதுபோன்ற பிரச்னைகள் எழாமல் தடுக்க, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், ஜன., 22 முதல், தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் முதல் நாளிலேயே, அரசு ஊழியர்களில், ஒரு தரப்பினர் மட்டுமே களத்தில் இருந்தனர்.அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், போராட்டம் வேண்டாம் என, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் துறை கமிஷனர் சத்ய கோபால் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர். அதனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், வேலைக்கு
திரும்பினர்.
ஆனால், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மட்டும், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை தீவிரப்படுத்தினர். பெரும்பாலான இடங்களில், பள்ளிகளுக்கு பூட்டு போட்டு, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் வராததால், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
மாணவர்களும், பொது மக்களும் ஆசிரியர்களின் போராட்டத்தால், கடும் கோபம் அடைந்தனர். பல இடங்களில், ஆசிரியர்கள் பணிக்கு வர வலியுறுத்தி, மாணவர்களும், பெற்றோரும் மறியல் செய்தனர்.
சமூக வலைதளங்களிலும், ஆசிரியர்களின் போராட்டத்தை, கடுமையாக விமர்சனம்
எழுந்தது.சாலைகளில் இறங்கி, மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆசிரியர்களில், 1,061 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.மேலும், பணிக்கு வராத ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பணியிடங்கள் காலியாகும் என்றும், அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் பாயும் என்றும், பள்ளி கல்வித்துறை எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையால், நேற்று முன்தினம், 70 சதவீத ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு வந்தனர். நேற்று, 95 சதவீதம் பேர், பணிக்கு திரும்பி
விட்டதாக, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்தார்.இவர்கள் அனைவருமே, போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்ப வில்லை என்றும், இவர்களை, சில சங்க நிர்வாகிகளே துாண்டி விட்டனர் என்றும், இவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது; சில ஆசிரியர்கள், வெளிப் படையாக பேட்டியும் கொடுத்தனர்.
இவர்களில், சங்க நிர்வாகிகள் மட்டும், இன்னும் வேலையை புறக்கணித்து வருகின்றனர். பணியில் இருந்து ஓய்வுபெற்று, சங்க நிர்வாகிகளாக உள்ளவர்கள், அவர்களை தடுப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன.எனவே, அரசு இயந்திரத்தை முடக்கும் நோக்கில், போராட்டத்தை துாண்டி விடும், சங்க நிர்வாகிகளின் விபரங்களை திரட்ட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், ஓய்வு பெற்ற பின்னும், சங்க பதவியை விடாமல் இருப்பவர்களின் பட்டியலும் தயாரிக்கப்படுகிறது.தாங்கள் பணியாற்றிய துறையை முன்னேற்ற உதவாமல், குழப்பம் செய்வோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாமா என, அரசு தரப்பில், ஆலோசனை நடந்து வருகிறது. எதிர்காலத்தில், பிரச்னைகள் எழாமல் தடுக்க, இந்த நடவடிக்கை உதவும் என, அரசு தரப்பு நம்புகிறது.