'வாட்ஸ் ஆப்' தகவல்; கடும் கட்டுப்பாடு

புதுடில்லி: 'வாட்ஸ் ஆப்' மூலம், ஒரே நேரத்தில், ஐந்து பேருக்கு மட்டுமே, தகவல்களை பகிரலாம் என்ற கட்டுப்பாட்டை, உலகம் முழுவதும், அந்த நிறுவனம் அமல்படுத்தி
உள்ளது.

'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் மூலம் பரவும் வதந்திகளால், அசம்பாவிதங்கள் நடப்பதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்தாண்டு ஜூலையில், 'வாட்ஸ் ஆப்' மூலம், ஒரு சமயத்தில், ஐந்து பேருக்கு மேல், தகவல், படங்கள், வீடியோக்களை பகிர முடியாது என்ற கட்டுப்பாடு, இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை, உலகம் முழுவதும் அமல்படுத்த, 'வாட்ஸ் ஆப்' முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து, 'வாட்ஸ் ஆப்' நிறுவன இணைய தளத்தில் கூறியுள்ளதாவது: 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பப்படும் தகவல்களை, ஒரு சமயத்தில், ஐந்தாக குறைக்க, கடந்தாண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக, பயனாளர்களின் கருத்துகள், ஆறு மாதங்களாக கேட்டு பெறப்பட்டன. இந்த கட்டுப்பாட்டால் பகிரப்படும் தகவல்கள் கணிசமாக குறைந்துள்ளதாக, பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் சிறப்பானதாக உள்ளதால், உலகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.