2019- ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15-க்குள் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

*2009&TET போராளிகளுக்கு வீர வணக்கங்கள்...*

_இன்று திருச்சியில் நடைபெற்ற *மாநில அளவிலான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் இறுதி செய்யப்பட்டது._


*வரும் 22/1/2019 அன்று முதல் நடைபெறவிருக்கும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் போராட்டத்தில் நமது 2009 & TET போராட்ட குழுவின் சார்பாக பள்ளியை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கோரிக்கையினை செவிமடுக்காமல் புறக்கணிப்பதால் பள்ளி வேலை நாட்களிலும் நாம் இந்த போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசு நம்மை தள்ளியுள்ளது. நாம் மாணவர்கள் நலன் கருதி இதுவரை விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம், ஆனாலும் அரசு செவிமடுக்காத காரணத்தினால் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் விதமாகவும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம்.*

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

 *"உண்மைப் போராளி  எதற்கும் விலைபோக  மாட்டான்...!*
*வீண் போகவும் மாட்டான்..." "உரிமைக்காக யார் போராடினாலும் அவர்களுக்காக களத்தில் நிற்பவனே உண்மை போராளிகள்....".*
*"நாம் உண்மை போராளிகள்...."*
*"எவருக்கும் விலையும் போகமாட்டோம்... நம்மை எவரும் விலைக்கு வாங்கவும் முடியாது...".*

💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

 *உண்மைப் போராளி அரசை நிர்ப்பந்தித்து அதற்கான கோரிக்கையை வென்றெடுப்பதற்காக அனைத்து வழிகளையும் பின்பற்றுவான். அத்தகைய வழிகளை தான் நாமும் பின்பற்றி உள்ளோம். நாம் நமது ஒற்றைக் கோரிக்கைக்காகவே  இந்த முடிவை எடுத்துள்ளோம்.*

🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂

 *இன்றைக்கு நாம் நினைத்தால் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பள்ளிகளுக்கு மேலாக திறந்து அரசுக்கு சாதகமாகவே செயல்பட்டு இருக்க முடியும்... ஆனால் நமது நோக்கம் அதுவல்ல...,  நமது கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்..! உரிமைக்காக போராடும் பொழுது வேடிக்கை பார்ப்பவன் உண்மை போராளிகள் அல்ல... "நாம் உண்மை போராளிகள்..".*

*வீணர்களின் விவாதங்களை தவிர்த்து போராட்ட குழுவின் மாநில தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு பள்ளியை புறக்கணியுங்கள்..*

🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷

 *இதற்கு மேலும் அரசு செவிமடுக்காமல் நமது ஒற்றைக்கோரிக்கையை நிறைவேற்றாமல் மூன்று முறை  எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுத்ததையும் நிறைவேற்றாமல் இருந்தால் வரும் 30/1/2019 முதல் மீண்டும் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது .  22/1/2019 முதல் வட்டார அளவில் நமது போராட்டக்குழு சார்ந்த ஆசிரியர்களை சந்திந்து ஜனவரி 30 போராட்டக்களத்திற்கு ஆயத்தப்படுத்தவும்..*

👉👉👉👉👉👉👉👉👉👉

 *அரசிடம் நாம் இன்று நேற்றல்ல இந்த கோரிக்கை வைப்பது... பத்தாண்டுகளாக வைத்துக் கொண்டிருக்கிறோம். அரசு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் &  21 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் நலனையும் கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு நம்மை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும்.  கோரிக்கை நிறைவேறும் வரை எத்தனை வழியில் போராட முடியுமோ அத்தனை வழிகளிலும் நாம் அரசுக்கு நெருக்கடியை கொடுப்போம்.*

👨‍🎓👩‍🎓👩‍🎓👨‍🎓👩‍🎓👨‍🎓👩‍🎓👨‍🎓👩‍🎓👨‍🎓

 *தொடர்ந்து நமது சட்ட போராட்டமும் அடுத்த வாரம் முதல் தீவிரப்படுத்தப்படும். கோரிக்கை வெல்லும் வரை நமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். வெற்றி பெறும் வரை போராட்டம் ஓயாது... வெற்றி என்பது எளிதல்ல அதை விட்டு விடும் எண்ணமும் நமக்குமில்லை...*

📝📝📝📝📝📝📝📝📝📝

*மேலும் அங்கன்வாடி பிரச்சனைக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வரும் செவ்வாய் கிழமை நமது போராட்டக்குழு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இரண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...*

இவண்...
*ஜே.ராபர்ட்*
*மாநில தலைமை*
*2009&TETஇடைநிலை ஆசிரியர்கள் போராட்ட குழு*