குரூப் - 2' முதன்மை தேர்வு எழுத
உள்ளவர்கள், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும்படி, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்திஉள்ளது.இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 2 பதவிகளில், முதன்மை தேர்வு எழுத, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய வேண்டும்.
24 முதல், ஜன., 10 மாலை, 5:30 மணி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி.,யால் தேர்வு செய்யப்பட்டுள்ள, அரசு, இ - சேவை மையங்கள் வழியாக, சான்றிதழ்களை பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட அவகாசத்தில் பதிவேற்றம் செய்யாதவர்கள், முதன்மை தேர்வில் பங்கேற்க விருப்பம் இல்லாதவர்கள் என, கருதப்படுவர்.முதன்மை தேர்வுக்கு, கட்டண சலுகை கோராதவர்கள், ஜன., 10க்குள், தேர்வு கட்டணமான, 150 ரூபாயை செலுத்த வேண்டும். தவறினால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் செலுத்திய பின், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.