ஒரு வாரத்தில் தொடக்க கல்வி டிப்ளமா(D.T.ED) தேர்வு முடிவு

தொடக்க கல்வி, டிப்ளமா தேர்வு முடிவு, ஒரு வாரத்திற்குள் வெளியாகும்' என, தேர்வுத்
துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மாவட்ட வாரியாக, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.


இவற்றில், தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டிப்ளமா -- டி.இ.எல்., படிப்பு நடத்தப்படுகிறது.இந்த படிப்பை முடிப்பவர்கள், அடுத்த கட்டமாக, பி.எட்., படிக்கலாம்; பட்டப்படிப்பிலும் சேரலாம்.அனைத்து பள்ளிகளிலும், ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த, டி.இ.எல்., அல்லது பி.எட்., தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.ஆண்டு தோறும், ஆகஸ்டில் இந்த தேர்வு நடத்தப்பட்டு, ஜனவரியில் முடிவு வெளியிடப்படும். இந்த ஆண்டு, 5,000க்கும் குறைவானவர்களே தேர்வில்பங்கேற்றுள்ளனர்.எனவே, தேர்வு முடிவை, இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிட, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.அதே நேரம், டிப்ளமா தேர்வு மதிப்பீட்டு முறையில், தவறு நடந்ததாக, சில ஊடகங்களில் வந்த செய்தி, தவறானது என, அதிகாரிகள் கூறினர்.