ஏழு தேர்வுகளுக்கான 'ரிசல்ட்' தேதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில்
நடத்தப்படும், போட்டி தேர்வுகளின் முடிவுகளை, திட்டமிட்ட தேதியில் வெளியிட, முடிவு செய்யப்பட்டது. குரூப் - 1 பதவியில், 85 பணியிடங்களுக்கான தேர்வின் முடிவு, இந்த மாத இறுதியில் வெளியாகிறது. வனத்துறை காவலர் பணி தேர்வு, குரூப் - 4 பதவியில், 12 ஆயிரம் காலியிடங்களுக்கான தேர்வு உட்பட, ஏழு தேர்வுகளுக்கான முடிவு தேதி, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது.தொழில் மற்றும் வணிக துறையில், விலை நிர்ணய உதவியாளர் என்ற, 'காஸ்ட் அசிஸ்டென்ட்' பதவியில், ஒரு காலியிடத்துக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.மார்ச், 2ல் நடக்கும் இந்த தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. ஜன., 2 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.