'பை'யுடன் வாங்க...! பிளாஸ்டிக் விழிப்புணர்வு

அடுத்த முறை வரும் போது, வீட்டிலிருந்து மறக்காமல், பை எடுத்துட்டு வாங்க...' என, வாடிக்கையாளர்களிடம், கடைக்காரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருகின்றனர்.தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனால், பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம், கடைக்காரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, சென்னையில் உள்ள, சூப்பர் மார்க்கெட் ஒன்றின் ஊழியர், சத்யா கூறியதாவது:எங்கள் சூப்பர் மார்க்கெட்டில், வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், பை எடுத்து வருவதில்லை. சிறிய பொருட்கள் முதல், பெரிய பொருட்கள் வரை அனைத்தையும், பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுப்போம்.தற்போது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திருப்பதால், அடுத்த முறை வரும் போது, வீட்டிலிருந்து, பை எடுத்து வரும்படி, வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறோம். கடைகளில் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளோம். ஆனால், இதை பெரும்பாலானோர் கவனிப்பதில்லை. இதனால், 'பில்' போட வரும் போது, அவர்களுக்கு நேரடியாக சொல்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தமிழகம் முழுவதும், டீ கடை முதல், பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து கடைகளிலும், பிளாஸ்டிக் தடை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன.
- நமது நிருபர்