ஏலியன்ஸ்கள் ஏற்கனவே பூமிக்கு வந்திருக்கலாம்: நாசா விஞ்ஞானி

கடந்த காலங்களில் பூமிக்குள் ஏலியன்ஸ்கள் ஏற்கனவே வந்து சென்றிருக்கலாம்,
ஆனால் அதனை மனிதர்களால் பார்த்திருக்க முடியாது என்று நாசா விஞ்ஞானி சில்வானோ பி. கொலம்பானோ கூறுகிறார்.
இது தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏலியன்ஸ்கள் பூமிக்குள் வரும் போது, சாதாரணமாக அவற்றை மனிதர்களால் பார்க்க முடியாத நிலை இருந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏலியன்ஸ்கள் பற்றிய செய்திகளும், தகவல்களும் ஊடகங்களில் ஏராளமாக பரவி வந்திருக்கும் நிலையில், இந்த ஆய்வறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் நம்மை விட தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சியோடு, பூமிக்கு வந்து பூமியை ஆய்வு செய்து செல்கின்றன என்ற தகவலை அடிப்படையாக வைத்து எத்தனையோ ஹாலிவுட் படங்கள் வந்து விட்டன. ஆனால் ஏலியன்ஸ்கள் பூமிக்கு வந்திருக்கலாம் என்ற தகவல் நிச்சயம் பொதுமக்களுக்கு ஒரு ஆச்சரியத்தோடு கூடிய தகவலாகவே உள்ளது.