வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை: கல்வித் துறை

சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளது கல்வித்துறை.

உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து தெரிவித்துள்ளது.
நிதித்துறை அறிவுறுத்தலின்படி வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.