புகைப்படம்
எடுத்து, மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டத்தை சென்னையில்,
அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.பள்ளிகளில் மாணவர்களின் வருகை
பதிவு முறையில், நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வகையில் பெங்களூரைச்
சேர்ந்த, ஐ.சி.இ.டி., என்ற நிறுவனம் ஆன்ட்ராய்டு செயலியை
உருவாக்கியுள்ளது.
இதில் மாணவர்களை புகைப்படம் எடுத்து வருகை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டம், சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சோதனை முறையில் நேற்று அமலானது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், திட்டத்தை துவக்கி வைத்தார். வகுப்பில் உள்ள மாணவியரின் பெயர்களை வருகை பதிவேட்டில் எழுதி வாசிக்க வேண்டியதில்லை.
அலைபேசி வழியாக மாணவியரை புகைப்படம் எடுத்தால், அவர்களின் முகங்களை வைத்து, வருகை பதிவு பட்டியல் தயாராகும். இதற்காக மாணவியரை தனித்தனியே புகைப்படம் எடுத்து ஆன்ட்ராய்டு செயலியில் பதிவு செய்து வைத்துள்ளனர். இதில், போலி வருகை பதிவு செய்ய முடியாது என, அதிகாரிகள் கூறினர்.