TNOU, பி.எட்., சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., சிறப்பு கல்வி படிப்பு நடத்தப்படுகிறது. இதில், 2019க்கான பி.எட்., சிறப்பு கல்விக்கு சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு, 'இந்திய மறுவாழ்வு கழக விதிகள் - 2015' மற்றும், தமிழக உயர்கல்வி விதிகளின்படி, கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 முடித்து, அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.எட்., சிறப்பு கல்வி பட்டப்படிப்பு, பி.எட்., பொது பட்ட படிப்புக்கு இணையானது என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யும், தமிழக அரசும் அறிவித்துள்ளன.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின்,www.tnou.ac.inஎன்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விபரங்களை, 044 - 2430 6600 என்ற, தொலைபேசியில் தெரிந்து கொள்ளலாம் என, பல்கலை பொறுப்பு பதிவாளர், தியாகராஜன் அறிவித்துள்ளார்.