சென்னையில் பள்ளிகளுக்கு, 'லீவு?'

சென்னை: 'கஜா' புயல் கரையை கடக்கும் நிலையில், சென்னையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை விடப்படுமா என, பெற்றோர்
எதிர்பார்த்துள்ளனர்.கடலுார் முதல் ராமநாதபுரம் வரையிலான மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலும், விடுமுறை விடப்படுமா என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.