ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை

Image result for dmk stalin
'கஜா' புயல் நிவாரண பணிகளுக்காக டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை

ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு..ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக மு..ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நியாயமான நடைமுறைக்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தியும், அப்போராட்டங்களை அதிமுக அரசு காதில் போட்டுக்கொள்ளவோ கண்டுகொள்ளவோ செய்யாமல் முற்றிலும் அலட்சியப்படுத்தியதின் விளைவாக, வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியிலிருந்து காலவரையறையற்றப் போராட்டத்தை நடத்தப் போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்திருக்கிறார்கள்.