தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: 6 ம் தேதி, தென் மாவட்டஙகளில் பல இடங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை அல்லது இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

7 ம் தேதி தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான வரை அல்லது இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.


அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வட மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை அல்லது இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். 7 ம் தேதி தென் மாவட்டங்களிலும் , 8, 9 10 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8, 9 ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலும், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். 10ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசானது வரையிலும், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

கனமழை நிலவரம்

6 ம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 7 ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்8 ம் தேதி, தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25 டிகிரி முதல் 32 டிகிரி வரை பதிவாகக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் நவ.,8 வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலில் 40 -50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, இந்திய கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.