கல்லுாரிகளுக்குபுதிய உத்தரவு

கோவை:மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், கல்விநிறுவனங்களில் ஆராய்ச்சிக்கான செயல்பாடுகளை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நடப்பு கல்வியாண்டு முதல், கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை, கல்லுாரிகளில், இன்ஸ்டிடியூஷன் இன்னவேஷன் கவுன்சில்'(ஐ.சி.சி.,) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய அளவில், 96 பல்கலைகள் ஐ.சி.சி., மையம் அமைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகள்; மீதமுள்ள கல்வி நிறுவனங்கள் இவ்வமைப்பை, வரும் 20ம் தேதிக்குள் அமைத்து, தகவல்களை இணையதளத்தில் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.