Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 17, 2018

சென்னை வர்தாவுக்கும், கேரள வெள்ளத்துக்கு கூடிய மனிதநேயம்... டெல்டா சிதைவுக்கு காணாமல் போவது தகுமா?

சென்னை வர்தாவுக்கு வந்த மனிதநேயம், எல்லையைக்கூட பார்க்காமல் கேரளாவிற்கு
நின்ற நாம் இன்று நமது டெல்டாவே சிதைந்து கிடக்கும் போது காணாமல் போவது தகுமா? என சென்னையில் வசித்து வரும் வேதாரண்யம் பகுதியை சார்ந்த தாஸ் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஊர் கூடினால் தானே தேர் நகரும். தென் கோடி மக்களுக்கான இந்த ஊர் கூடவே இல்லை!
சென்னையில் வர்தா புயல், வெள்ளம் என்ற போதெல்லாம் தமிழகமே கலங்கியது. லாரி லாரியாக பொருட்களும் ஆட்களும் தமிழகத்தின் மூளை முடுக்கில் இருந்தவர்கள் எல்லாம் தலைநகர் சென்னையை நோக்கி படையெடுத்தன. நாகையில் இருந்து லாரியில் படகுகள் கொண்டு வரப்பட்டன. சென்னையை மீட்கக்கூறி சமூக ஊடகங்களில் ஹேஸ்டேக்குகள் பறந்தன. மீம்ஸ்கள் பறந்தன. தமிழகமே கைகோர்ந்து நினறதை உலகமே கண்டு வியந்தது. இதே வேகம், கேரள கோரத்தாண்டவ வெள்ளத்திலும் எதிரொளித்தது. லாரி லாரியாய் பொருட்கள் கேரளாவுக்குச் சென்றன. கேரளாவில் இருந்து நன்றி கூறிய நெகிழ்ச்சி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி தமிழகத்தின் கெத்தை எதிரொளித்தது. அரசியல் வாதிகள், நடிகர், நடிகைகள் என செலிபிரிட்டி வகையறாக்கள் விழப்புணர்வை ஏற்படுத்தி தலைநிமிர்ந்தன.

நிற்க.
தமிழகத்தின் வரைபடைத்தை நேராக வைத்தால் ஒரு மூக்கு போல இருக்கும். அது வேதாரண்யம். வேதாரண்யத்துக்கு அந்தப்பக்கம் கடல். அருகே ஒரு காடு, அது கோடியக்கரை. மான், முயல், குதிரை, வெளிநாட்டு பறவைகள் என ஒரு சரணாலயம் அது. 'அன் சங் ஹீரோ' என்பார்களே அந்த வகை. ஓரத்தில் சிக்கி விட்டதால் உலகால் கண்டுகொள்ளப்படாத சரணாலயம்.
டெல்டா என்றால் தொழிற்சாலை சார்ந்த தொழில் கிடையாது. மண்ணு, மரம், ஆடு, மாடு, செடி, கொடி, கடலூ, மீனு, உப்பு இவற்றுக்குள் அடங்கிவிடும் அவர்கள் வாழ்வு.
இயர்கைதான் அங்கே சாமி. மழை பெய்தா பயிர் உண்டு. இல்லாவிடில் நஷ்டம். காவிரியில் தண்ணீர் வந்தால் விவசாயம். இல்லாவிட்டால் நஷ்டம். இதனை வைத்து வாழ்க்கையை பெரிதாய் ஓட்டிவிட முடியாது என்பதே காலவழக்கம். அதற்காக அங்கு உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு ஓட தொடங்கினார். வீட்டிற்கு ஒரு இளைஞர் சிங்கப்பூரில் இருப்பான். எந்த நாடு வேண்டுமானாலும் சென்று டெல்டாகாரன் அந்தப்பக்கம் வாடா என்றால் நாலு பேரு வந்து நிற்பான். மிச்ச சொச்சம் சிலர் சென்னை, கோவை என திரிந்துகொண்டு இருப்பர். இப்படி ஒரு வாழ்க்கை முறையை கொண்டுள்ள ஊர்தான் இன்று இயற்கையின் சீற்றத்தால் சீரழிந்து கிடக்கிறது.

வேதாரண்யம் மட்டுமல்ல டெல்டாவே சீரழிந்து கிடக்கிறது. மாதம் மாதம் தேங்காய் பறித்தால்தான் குடும்பம் ஓடும் என்ற நிலையில் உள்ளவர்களின் சென்னை மரங்கள் எதுவும் இன்று இல்லை. எல்லாம் பல தலைமுறைகளை தாண்டிய தென்னை மரங்கள், மீண்டும் மரம் நட்டு, வளர்த்து காய்க்கத் தொடங்கி அது வியபாரம் ஆகும் போது பலருக்கு வயது தளர்ந்திருக்கும். அதுவரை எப்படி குடும்பத்தை ஓட்டுவது என்றால்? அதற்கு இப்போதைக்குப் பதில் இல்லை.
சென்னை வெள்ளத்தின்போது நாம் பார்த்த வாஞ்சையும், நம் மக்கள் என்ற இரக்கமும், உதவும் மனப்பான்மையும் இன்று உள்ளதா என்று பலர் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொள்கின்ற நேரம் இது. அங்கங்கே சிலர் உதவிக்காக குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், ஊர் கூடினால் தானே தேர் நகரும். தென்கோடி மக்களுக்காக இந்த ஊர் கூடவே இல்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. வழக்கம் போல் சென்னை இயங்கிகொண்டு இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் டெல்டாவாசிகள் மற்றும் சில உதவும் உள்ளங்கள்தான் கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.
கஜாவை கலாய்த்து போட்ட மீம்களின் கால்வாசியைக்கூட கஜாவின் பாதிப்புக்காக போடவில்லை. வழக்கம் போல் யாரோ ஒரு பெண்ணை இந்த வாரத்துக்கான அழகியாய் தேர்வு செய்து ட்ரெண்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அங்கே வீழ்ந்துகிடப்பது நமது மக்கள். அவர்கள் வாய்விட்டு கதறிக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நமக்குத்தான் இங்கு கேட்கவே இல்லை. கஷ்டம் என்றால் வந்து நிற்போம். இதுதான் தமிழ் மக்கள் என்ற பிம்பம் இருக்கிறதே, அதை அப்படி நிலைநாட்டி விடுவோம். எல்லையைக்கூட பார்க்காமல் கேரளாவிற்காக நின்ற நாம் இன்று எல்லை சிதைந்து கிடக்கும் போது காணாமல் போவது தகுமா? என சென்னையில் வசிக்கும் டெல்டா தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment