திருவாரூர் மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை திங்கள்கிழமை (நவ.26) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்
உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டியும், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை பள்ளிகளுக்கு மட்டும் நாளை திங்கள்கிழமை(நவ.26) விடுமுறை அளிக்கப்படுகிறது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.