6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை : 'கஜா' புயல் கரையை கடப்பதால், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கஜா
புயல், கடலுார் மற்றும் பாம்பன் இடையே இன்று கரையை கடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில், கடலுார், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய, ஆறு மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, அம்மாநிலத்திற்கான பள்ளி கல்வி இணை இயக்குனர், குப்புசாமி அறிவித்துள்ளார்.