டிச., 4ல் ஸ்டிரைக் : அரசு டாக்டர்கள் முடிவு

சென்னை: ஊதிய உயர்வு கோரி, டிசம்பர், 4ல், ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக, அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் வரை, 20 ஆயிரம் டாக்டர்கள்
பணிபுரிகின்றனர். பயிற்சி வகுப்புகள்இவர்கள், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் கோரி, போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, செப்., 21ல், 'ஸ்டிரைக்' நடத்தப்போவதாக அறிவித்தனர்.இதையடுத்து, ஊதிய உயர்வு தொடர்பாக ஆய்வு செய்ய, அரசு தரப்பில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, சமீபத்தில், அரசுக்கு அளித்த பரிந்துரை:தமிழக அரசு டாக்டர்கள், அரசு பணியை முடித்த பின், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். மத்திய அரசு டாக்டர்கள், அவ்வாறு செல்ல அனுமதியில்லை. எனவே, தமிழக அரசு டாக்டர்களுக்கு, ஊதிய உயர்வுக்குப் பதிலாக, அலவன்ஸ் வழங்கலாம். இவ்வாறு, பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை ஏற்க மறுத்துள்ள, அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு, டிச., 4ல், 'ஸ்டிரைக்' நடத்தப் போவதாக அறிவித்துஉள்ளது.கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:எங்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு ஏற்காததால், வரும், 19ம் தேதி, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டப் பணிகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை புறக்கணிக்க உள்ளோம்.புறக்கணிப்போம்தொடர்ந்து, 29ம் தேதி, முன்திட்ட மிட்ட அறுவை சிகிச்சை, மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய களப்பணிகளை, புறக்கணிப்போம். டிச., 3ல் புறநோயாளிகள் பிரிவு, பிரேத பரிசோதனை புறக்கணிப்பு; டிச., 4ல், அடையாள வேலை நிறுத்தம் என, தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.