தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பெரிய அளவில் மழை இல்லை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது என்றும் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று சனிக்கிழமை நிலவியது. இது தற்போது வலுவிழந்துவிட்டது.
மேலும், தமிழகம்,புதுச்சேரியில் பெரிய அளவில் மழைக்கான எந்தக் காரணிகளும் தற்போது உருவாகவில்லை.
எனவே, அடுத்த 3 நாள்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது. இருப்பினும், வடகிழக்குப் பருவம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை திங்கள்கிழமை மிதமான மழை பெய்ய வா