கஜா புயல் காரணமாக கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (நவ.,16) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர்: கஜா புயல் காரணமாக கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (நவ.,16) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் பள்ளி,கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை, காரைக்குடி அழகப்பா, திருச்சி பாரதிதாசன், அரியலூர் அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி, மற்றும் புதுச்சேரி பல்கலைகழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். திருவாரூர் மத்திய பல்கலையில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.


இந்நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் நவ.,22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.